எடப்பாடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் ரகளை

 

சிவகங்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் காரைக்குடி தொகுதி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி ஆகியோரை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது தேவகோட்டையிலிருந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸை அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மறித்தனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காளையார்கோவிலில் இருந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றிக் கொண்டு மற்றொரு ஆம்புலன்ஸ் வந்தது. இதைப் பார்த்து அதிமுகவினர் சாலையை மறைத்து நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் நின்றனர். இதனால், ஆம்புலன்ஸில் நோயாளியை ஏற்றி வந்த உறவினர்கள் தவித்தனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் அதிமுகவினரை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி தந்தனர். முக்கிய சாலையில் பிரசாரத்தை ஏற்பாடு செய்யும் அதிமுகவினர் ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிடவேண்டும் என்ற சிந்தனை கூட இல்லாமல் இருக்கின்றனரே என பொதுமக்கள் அதிருப்தியுற்றனர்.

* வாலிபர் பரிதாப பலி

சிவகங்கையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மதகுபட்டி வழியாக எடப்பாடி பழனிசாமி சென்றார். அவருடன் பாதுகாப்பு போலீஸ் வாகனங்கள், கட்சியினரின் வாகனங்கள் சென்றன. மதகுபட்டி பகுதியில் எடப்பாடி பழனிசாமி கார் மற்றும் அவரது கட்சியினரின் வாகனங்களுக்கு பின்னால், கடைசியாக சிவகங்கை போலீஸ் ஜீப் சென்றது. அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த மதகுபட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (27) என்பவர் மீது போலீஸ் ஜீப் மோதியது. இதில், படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே
இறந்தார்.

Related Stories: