திருவையாறு தாலுகா அலுவலகத்தில் மணல் கடத்தல் தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம்

திருவையாறு, பிப்.18: திருவையாறு தாலுகா அலுவலகத்தில் வட்ட அளவிலான மணல் கடத்தல் தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் தாசில்தார் நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், கொள்ளிடம் ஆறு பிரிவு பணி ஆய்வாளர் விஜய், காவிரி ஆறு பிரிவு பணி ஆய்வாளர் சந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் மஞ்சு, சந்துரு ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தாசிதார், காவல் ஆய்வாளருடன் சேர்ந்து 7 நாட்களுக்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுவது. மண்டல துணை தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிதனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு இரவு முழுவதும் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். பொதுப்பணித்துறையில் உள்ள பாசன உதவியாளர்கள் மணல் எடுக்கும் போது தகவல் தரவேண்டும் என்றும் இப்பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

திருவையாறு வட்டத்தில் அனுமதியின்றி செங்கல் கால்வாய் போடுவதை தடுத்திட பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் உரிமம் பெறாமல் செய்யப்படும் செங்கல் சூளை உரிமையாளர்கள் விவரத்தினை கிராம நிர்வாக அலுவலர் கண்காணித்து திருவையாறு வட்ட அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: