சென்னை: சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி சுமார் 35 கி.மீ தூரம் 11,800 பேர் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியை சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி, 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி சோழிங்கநல்லூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் இருந்து மாமல்லபுரம் வரை சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் 11,800 பேர் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியை தேர்தல் அலுவலரும், கலெக்டருமான எஸ்.மாலதி ஹெலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து சோழிங்கநல்லூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியையையும், விழிப்புணர்வு சுடர் விளக்கினையும் தேர்தல் அலுவலர், கலெக்டர் மாலதி ஹெலன் தொடங்கி வைத்தார். கல்லூரி கூட்டரங்கில் 100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, பேரணி 5 கி.மீ பயணித்து திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட படூர் டவுண்டானாவை சென்றடைந்தது. அங்கு தேர்தல் வழிப்புணர்வு சுடர்விளக்கை பெற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர் அங்கு தயார் நிலையில் இருந்த பொதுமக்கள் மாணவ, மாணவியர்கள் 100 பேரின் இருசக்கர மோட்டார் வாகன அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாகன பேரணி கேளம்பாக்கத்தில் முடிவடைந்தது. அங்கு தேர்தல் விழிப்புணர்வு சுடர் விளக்கை பெற்றுக்கொண்டு அங்கு 50 மூன்று சக்கர ஆட்டோ தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிறகு திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவளத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தேர்தல் அலுவலர் பார்வையிட்டார். தொடர்ந்து 50 நான்கு சக்கர மகிழுந்துகளின் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். மாமல்லபுரத்தில் நடந்த படகுகள் மூலம் மீனவர்கள் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்வையிட்டார். மேலும் 100 சதவிகித வாக்குபதிவினை வழியுறுத்தி அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பத்தினை ரசிததார்.
100 சதவிகித வாக்கு பதிவினை வலியுறுத்தி மாமல்லபுரத்தில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், அரசு பேருந்துகளில் எனது வாக்கு எனது பெருமை\\” என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டிருக்கும் அரசு பேருந்துகளை தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) திருமணியரசன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதேவி, ஊரக வளர்ச்சி (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா. அரசு அலுவலர்கள்,மற்றும் மாணவ/ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
