தர்மபுரியில் வெயில் அதிகரிப்பால் நுங்கு விற்பனை ஜோர்

தர்மபுரி : தர்மபுரியில், வெயில் அதிகரிப்பால் நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.தர்மபுரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதமாக கோடை வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக 95 டிகிரியை கடந்து, நேற்று முன்தினம் 99.5 டிகிரியாக நிலவியது.

அனல் காற்றை வீசி வரும் நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால், பகல் நேரங்களில் வெளியில் வராமல், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

தங்களின் உடல் சூட்டை தணிக்க, பழ வகைகள், இயற்கை குளிர்பானங்களை பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திற்கு சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர் பகுதிகளில் இருந்து நுங்கு விற்பனைக்கு அதிகம் கொண்டு வரப்படுகிறது.

கடந்தாண்டு ஏராளமான பனை மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவதால், பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மேலும் பதநீர் இறக்குவதற்காக விடப்படுவதாலும், நுங்கு வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில், தர்மபுரி நெசவாளர் நகர் மற்றும் இலக்கியம்பட்டி ஆகிய இடங்களில் குறைந்த அளவிலான வியாபாரிகளே நுங்கு விற்பனை செய்கின்றனர். நடப்பாண்டில் 6 நுங்குகள் ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு 3 நுங்குகள் ரூ.20க்கு விற்பனையானது.

100.4 டிகிரி பாரன்ஹீட் வெயில்

தர்மபுரி மாவட்டத்தில், கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது, சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. காலை 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடை வெப்பத்தை தணிக்கை தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய், முலாம்பழம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு உடல் சூட்டை தணித்து வருகின்றனர். கடந்த 27ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. நேற்று 100.4 டிகிரி பாரன்ஹீட்டாக வெயில் பதிவானது. நடப்பாண்டில் நேற்று தான் முதன்முறையாக தர்மபுரி மாவட்டத்தில் வெயில் சதத்தை தாண்டியது.

Related Stories: