- நெல்லா முபாரக்
- SDBI
- நெலாலா முபாரக்
- நன்னிலம்
- சென்னை
- நிலை
- ஜனாதிபதி
- நன்னிலம்
- எஸ்.டி.பி.ஐ கட்சி
- தமிழ்நாடு சட்டமன்றம்
- திமுகா
- திமுக தொகுதி பங்கேற்புக் குழு
சென்னை: எஸ்டிபிஐ கட்சி சார்பில் நன்னிலம் தொகுதியில் மாநில தலைவர் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அணியில் எஸ்டிபிஐ கட்சி இடம் பெற்றுள்ளது. திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாக், தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் அந்த கட்சிக்கு நன்னிலம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை மண்ணடியில் உள்ள கட்சியின் மாநில தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில் நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக, கட்சியின் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முகம்மது முபாரக்கை, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி அறிவிப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொருளாளர் அப்துல் சத்தார், தேசிய செயலாளர் யாமுகைதீன், தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக், பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், ஏ.கே.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அமீர் ஹம்சா, முகமது ரஷீத், பஷீர் சுல்தான், ரத்தினம் மற்றும் சென்னை மண்டலத்திற்குட்பட்ட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
