- Maji
- சட்டமன்ற உறுப்பினர்
- கதிரவன்
- அத்தமுக்
- பிளாக் பார்ட்டி
- ராமநாதபுரம்
- அகில இந்திய முன்னோக்கு பிளாக் கட்சி
- அத்தமுக்
- அகில இந்திய முன்னோக்கு தொகுதி கட்சி கமுடி யூனிய
ராமநாதபுரம்: அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர், முன்னாள் எம்எல்ஏ கதிரவனை நீக்குவதாக தீர்மானம் இயற்றப்பட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கமுதி ஒன்றியம் ஏ.தரைக்குடியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும், அக்கட்சி மாநில பொதுச்செயலாளர், முன்னாள் எம்எல்ஏ கதிரவனை, தேசிய தலைமை சஸ்பெண்ட் செய்துள்ளது. அதனை முன்மொழிந்து கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கக் கோரி 22 மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஏகமனதாக முடிவு செய்து, தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்வதற்கு தீர்மானம் இயற்றப்பட்டது.
இதுகுறித்து தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் கூறும்போது, ‘‘கதிரவன் தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால், அவரை தேசிய தலைமை தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது. அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஒருமனதாக முடிவு செய்து தீர்மானம் இயற்றப்பட்டது. அதன் நகல் தேசிய தலைமைக்கு அனுப்பப்பட உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரால் வளர்க்கப்பட்ட சிங்கம் சின்னம். இதனை மீண்டும் தமிழக மக்களிடையே கொண்டு போய் சேர்க்கும் விதமாக தனித்து போட்டியிட அனைத்து நிர்வாகிகளும் விரும்புகின்றனர். அதன்படி தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்’’ என்றார்.
