×

பழநி தொகுதியை தங்களுக்கே ஒதுக்கக்கூறி ஒன்றிய அமைச்சரை பாஜவினர் முற்றுகை

பழநி: பழநி தொகுதியை பாஜவிற்கு மாற்றி விட வேண்டுமென வலியுறுத்தி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கட்சி அலுவலகம் முன்பு தேங்காய் உடைத்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு தொண்டர் கட்சி கட்டிடத்தின் மாடியில் இருந்து குதிப்பதாக தற்கொலை முயற்சி மிரட்டல் விடுத்தார். நேற்று முன்தினம் பழநி வந்த பாஜ ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் வருகையை பாஜவினர் புறக்கணித்தனர். நேற்று புலிப்பாணி ஆசிரமம் வந்த எல்.முருகனை கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழநி தொகுதியை கேட்டு பெறாவிட்டால் கட்சியை விட்டு விலகி விடுவோமென மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர், கட்சி தலைமைக்கு இக்கருத்துக்களை கொண்டு செல்வதாக கூறி சென்றார். பாஜ நிர்வாகிகளின் இந்நடவடிக்கை அதிமுக வேட்பாளரை கடும் அப்செட்டாகி உள்ளது. தொகுதியை ஒதுக்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி கட்சியான பாஜகவினரின் இந்நடவடிக்கை பழநி அதிமுகவினரிடம் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Tags : BJP ,Union Minister ,Palani ,
× RELATED யாருக்கு சீட் தரணும்னு தலைமைக்கு தெரியும்…. அண்ணாமலைக்கு வானதி சூடு