×

காரை நிறுத்தி சோதனை பறக்கும் படையிடம் சீமான் கடும் மோதல்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் நாதக சார்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். நேற்று இரவு புதுவயல் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காரைக்குடியில் இருந்து புதுவயல் நோக்கி காரில் சீமான் சென்றார். அப்பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி சுப்புலட்சுமி தலைமையில் அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் சீமான் காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த சீமான் காரில் இருந்து கீழே இறங்கி தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகாரிகளை பார்த்து, ‘‘வாக்குக்கு காசு கொடுப்பவர்களை நீங்கள் தடுப்பீர்களா, 1000, 2000 என கொடுக்கிறார்கள். அதனை ஏன் உங்கள் பறக்கும் படை பிடிப்பது இல்லை. என்னை சோதனை செய்யுங்கள் பிரச்னை இல்லை.

ஆட்டுக்குட்டி ஏற்றிக்கொண்டு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்களை பிடித்து சோதனை செய்கிறீர்கள். வாக்குக்கு பணம் கொடுக்காமல் உங்களால் தடுக்க முடியுமா, கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என பதாகை வைக்கிறீர்கள். ஒருவரை கூட கைது செய்து சிறையில் போடவில்லை.

என்னை மறித்து சோதனையிட்டு உங்கள் பவரை காட்டுகிறீர்கள். இதுபோல் எடப்பாடி வரும் போதும் பார்க்க வேண்டும். வாக்குக்கு காசு கொடுப்பவர்களை விட்டு விடுங்கள், காசு கொடுக்காதவர்களை பிடித்து சோதனை செய்யுங்கள்’’ என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது வாகன டிக்கியை திறக்க கூறி சோதனையிட அனுமதித்தார்.

Tags : Seeman ,Karaikudi ,Sivaganga district ,Nathaka ,Puduvayal ,
× RELATED யாருக்கு சீட் தரணும்னு தலைமைக்கு தெரியும்…. அண்ணாமலைக்கு வானதி சூடு