×

எடப்பாடி வாகனத்தில் பறக்கும் படை சோதனை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாகர்கோவில் வந்தார். நாகர்கோவிலிலில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், அங்கிருந்து ஆரல்வாய்மொழி பகுதியில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனது வாகனத்தில் புறப்பட்டார்.

அவரது வாகனம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள அப்டா மார்க்கெட் அருகே சென்றபோது, அங்கு பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை வழிமறித்து நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையின்போது எடப்பாடி பழனிசாமி தனது வாகனத்திலேயே அமைதியாக அமர்ந்திருந்தார். வாகனத்தில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் இல்லாததைத் தொடர்ந்து, சில நிமிட சோதனைக்குப் பிறகு அதிகாரிகள் வாகனத்தைச் செல்ல அனுமதித்தனர்.

Tags : Edappadi ,Nagercoil ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Kanyakumari district ,Aralvaimozhi ,
× RELATED யாருக்கு சீட் தரணும்னு தலைமைக்கு தெரியும்…. அண்ணாமலைக்கு வானதி சூடு