×

விசில் சின்னம் பொறித்த 3926 சில்வர் தட்டுகள், 16 குக்கர்கள் பறிமுதல்: தவெக வேட்பாளர், நிர்வாகி மீது வழக்கு

தூத்துக்குடி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பரிசு பொருட்கள் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனையடுத்து பறக்கும்படை குழுவினர் ஆறுமுகநேரி திசைக்காவல் தெருவில் உள்ள தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன் இசக்கி(32) வீட்டில் திடீரென சோதனையிட்டனர்.

அப்போது வாக்காளர்களுக்கு விநியோகிக்க விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 3,926 சில்வர் தட்டுகள் மற்றும் அட்டை பெட்டிகளில் 16 குக்கர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 16 குக்கர்கள் மற்றும் விசில் சின்னம் பொறித்த 3,926 சில்வர் தட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் திலீபனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்இசக்கி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 23ம் தேதி உடன்குடி பகுதியில் தவெக நிர்வாகி வீட்டில் விசில் சின்னம் பொறித்த 4,971 தட்டுகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் நேற்றுமுன்தினம் தவெகவினர் விதி மீறி அங்குள்ள பெரியமசூதி அருகே அனுமதி இன்றி தவெகவினர் பிரசாரம் மேற்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து விஏஓ அளித்த புகாரின்பேரில் நேற்று ஆம்பூர் தவெக வேட்பாளரும், கட்சியின் நிர்வாகியுமான இம்தியாஸ் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags : Thaveka ,Thoothukudi ,Election Flying Squad ,Tamil Nadu ,Flying Squad ,Arumuganeri ,
× RELATED யாருக்கு சீட் தரணும்னு தலைமைக்கு தெரியும்…. அண்ணாமலைக்கு வானதி சூடு