- விஜய்
- பெரம்பூர், திருச்சி கிழக்கு
- தொகுதி
- தவேகா
- சென்னை
- தமிழ்நாடு வெற்றி கழகம்
- சட்டப்பேரவை
- பெரம்பூர்
- திருச்சி கிழக்கு
- நட்சத்திர ஹோட்டல்
- நுங்கம்பக், சென்னை
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகம் நேற்று அறிவித்தது. கட்சி தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் விஜய். வேட்பாளர்கள் விவரம்:
பெரம்பூர், திருச்சி கிழக்கு – ஜோசப் விஜய், தி.நகர் – புஸ்ஸி ஆனந்த், வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜூனா, கோபிச்செட்டிப்பாளையம் – செங்கோட்டையன், கொளத்தூர் – வி.எஸ்.பாபு, திருச்செங்கோடு – அருண்ராஜ், திருப்பரங்குன்றம் – சி.டி.ஆர் நிர்மல்குமார், மயிலாப்பூர் – வெங்கட்ரமணன், ஆயிரம் விளக்கு – ஜே.சி.டி பிரபாகர், லால்குடி – கு.ப.கிருஷ்ணன், திருப்பூர் வடக்கு – சத்யபாமா, ஆர்.கே.நகர் – மரியவில்சன்,
கும்மிடிப்பூண்டி – விஜயகுமார், எழும்பூர் (தனி) – ராஜ்மோகன், சோழிங்கநல்லூர் – ஈ.சி.ஆர் சரவணன், திரு.வி.க.நகர் (தனி) – பல்லவி, ராயபுரம் – தாமு, சைதாப்பேட்டை – அருள் பிரகாசம், பொன்னேரி (தனி) – ரவி, திருத்தணி – சத்யகுமார், திருவள்ளூர் – அருண்குமார், பூந்தமல்லி (தனி) – பிரகாசம், ஆவடி – ரமேஷ், மதுரவாயில் – ரேவந்த் சரண், அம்பத்தூர் – பாலமுருகன், மாதவரம் – பிரபு, திருவொற்றியூர் – செந்தில் குமார், துறைமுகம் – சினோரா அசோக், சேப்பாக்கம் – டி.செல்வம், அண்ணாநகர் – வி.கே.ராம்குமார்,
விருகம்பாக்கம் – சபரிநாதன், வேளச்சேரி – ஆர்.குமார், ஆலந்தூர் – ஹரீஷ், திருப்பெரும்புதூர் (தனி) – தென்னரசு, பல்லாவரம் – காமாட்சி, தாம்பரம் – சரத் குமார், செங்கல்பட்டு – தியாகராஜன், திருப்போரூர் – விஜயராஜ், செய்யூர் (தனி) – மோகன் ராஜ், மதுராந்தகம் (தனி) – எழில் கேத்தரின், உத்திரமேரூர் – முனி ரத்தினம், காஞ்சிபுரம் – ரஞ்சித் குமார் உள்ளிட்ட 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
* போரட்டத்தில் குதித்த தவெகவினர்
வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றுகொண்டு இருந்தபோது தவெக வேலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திடீரென உத்தமர் காந்தி சாலையில் என்.ஆனந்த், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரைக் கண்டித்துச் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட கே.வி.குப்பம் தொகுதியைச் சேர்ந்த பிரபு கூறுகையில், ‘‘இரண்டு மூன்று ஆண்டாக கே.வி.குப்பம் தொகுதியில் வேலை செய்துள்ளோம்.
தொகுதியைக் கண்டிப்பாக உங்களுக்குக் கொடுக்கிறோம் வேலை செய்யுங்கள் என்று பொதுச் செயலாளர் என்னிடம் கூறினார். ஆனால், விருப்பமனு கொடுத்த என்னிடம் நேர்காணல் நடத்தவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்தவருக்கு அந்தத் தொகுதியைக் கொடுத்துள்ளார்கள். பணம் வாங்கிக்கொண்டு தொகுதியைக் கொடுத்துள்ளதாகச் சில செய்திகளும் வெளியாகியுள்ளன’’ என்றார்.
