- புதிய தமிழரசுக் கட்சி
- கிருஷ்ணசாமி
- ஓட்டப்பிடாரம்
- சென்னை
- நுங்கம்பாக்கம்
- ஷ்யாம் கிருஷ்ணசாமி
- ஸ்ரீவில்லிபுத்தூர்…
சென்னை: புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். கட்சியின் இளைஞர் அணி தலைவரும் கிருஷ்ணசாமியின் மகனுமான ஷியாம் கிருஷ்ணசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் நெல்லையில் போட்டியிடுகிறார்.
இதன் பின் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி: தற்போது 43 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்து இருக்கிறோம், மீதம் உள்ளதை விரைவில் அறிவிப்போம். புதிய தமிழகம் கட்சி 60 முதல் 70 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்தோம். அதற்காக அவரது வீட்டில் நேரில் சந்தித்தோம். வேலுமணியை வீட்டில் சந்தித்தோம். அதுமட்டுமின்றி பல்வேறு முன்னாள் அமைச்சர்களும் சந்தித்தார்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ எதுவுமே நடக்கவில்லை என்பது போல பேசுகிறார் இபிஎஸ்.
அதற்கு காரணம் என்னவென்று அவருக்குத்தான் தெரியும். நடந்ததை நடந்ததாகச் சொல்லுகிறோம். புறக்கணிக்கும் காட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும், பாடம் புகட்ட வேண்டும், களத்தில் சந்திக்க வேண்டும், ஓட ஓட விரட்ட வேண்டும் என்ற முடிவுடன் வந்திருக்கிறோம். அதிமுகவை முடிச்சுக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். எங்களால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். முன்னாள் முதல்வர், ஒரு பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் அவர் பொய் சொன்னால் என்ன செய்வது? இவ்வாறு அவர் கூறினார்.
