- ஜான் பாண்டியன்
- ராஜபாளையம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மக்கல் முனேத்ர கஜகம்
- தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம்
- தேசிய ஜனநாயக கூட்டணி
- டி.எம்.எம்.
சென்னை: தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து தமமுக நிர்வாக குழுக்கூட்ட முடிவின்படி அந்த தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் (ஜான்பாண்டியனின் மனைவி) தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரிசில்லா பண்டியன் கூறுகையில், ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் தமமுக சார்பில் ராஜபாளையம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தொகுதி மக்களின் பிரச்னை தீர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
