ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து; 47 ஆயிரம் டன் எல்பிஜி உடன் இந்திய கப்பல் குஜராத் வந்தது

 

அகமதாபாத்: மேற்கு ஆசியா போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து 47 ஆயிரம் டன் எல்பிஜி எரிவாயுவுடன் இந்திய கப்பல் ஜக் வசந்த் குஜராத் துறைமுகத்தை வந்தடைந்தது. மேற்கு ஆசியாவில் போர் நடக்கும் நிலையில், எண்ணெய், எரிவாயுவுக்கான முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி அளித்து வருகிறது. அதன்படி, குவைத்தின் மினா அல் அஹ்மதி துறைமுகத்தில் இருந்து 47 ஆயிரம் டன் எல்பிஜி எரிவாயு ஏற்றிய இந்திய கப்பல் ஜக் வசந்த் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு குஜராத்தின் வதினார் துறைமுகத்திற்கு பத்திரமாக வந்தடைந்தது.

இந்த கப்பலில் இருந்து 17,600 டன் எல்பிஜி துணை கப்பலுக்கு மாற்றும் பணி நடந்தது. 15 மணி நேர பரிமாற்றப்பணி நேற்று முடிந்ததும், துணை கப்பல் சரக்குகளை இறக்குவதற்கு காண்ட்லா துறைமுகத்தை நோக்கி சென்றது. ஜக் வசந்த் கப்பலில் எஞ்சிய 20,000 மெட்ரிக் எல்பிஜி மும்பையிலும், 9,000 டன் எல்பிஜி மங்களூருவிலும் இறக்கப்படும் என துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: