ஏற்கனவே 6 ஏர்போர்ட்டை மூடிட்டீங்க; கூட்டாளிக்கு உதவ புது விமான நிலையம் திறப்பு: பாஜ மீது அகிலேஷ் தாக்கு

 

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது தொடர்பாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஒன்றிய பாஜ அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தன் எக்ஸ் பதிவில் மூடப்பட்ட விமான நிலையங்களின் காணொலியை வௌியிட்டுள்ளார். அத்துடன், “பாஜவின் ஊழல் நிர்வாகத்தை பாருங்கள். சமீபத்திய ஆண்டுகளில் திறக்கப்பட்ட 7 விமான நிலையங்களில் 6 விமான நிலையங்கள் மூடப்பட்டு விட்டன.

செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களும் சரியாக இல்லை. உடான் திட்டத்தின்கீழ், எந்த விமான நிலையங்களையும் இயக்கவோ அல்லது விமானங்களை ஓட்டவோ பாஜவுக்கு எந்த எண்ணமும் இல்லை. அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். பாஜ அரசாங்கம் தனது கூட்டாளிகளுக்கு ஒப்பந்தங்களை வழங்கி, லாபம் அடைவதற்காகவே இதுபோன்று கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகிறது” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

Related Stories: