பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு பள்ளி படிப்பு முடிந்ததை கொண்டாடிய மாணவிகள்

திருப்பூர் : தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை 90 தேர்வு மையங்களில் 14,478 மாணவியர்கள், 11,930 மாணவர்கள் என 26,408 பேர் எழுதினர். மையங்களில் தேர்வு அறை கண்காணிப்பாளர், தேர்வு மைய கண்காணிப்பாளர், பறக்கும்படை அலுவலர்கள் என 2000க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தொடர்பு ஆங்கிலம், அறநெறி மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளி விவரங்கள், நர்சிங் தொழிற்கல்வி, அடிப்படை மின் பொறியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான தேர்வு நடைபெற்று முடிவடைந்தது.

நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்ததோடு மாணவர்களுக்கு பள்ளி கல்வியும் நிறைவடைந்தது. இதனை வரவேற்கும் வகையில் இறுதி தேர்வை முடித்து தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்த மாணவிகள் துள்ளிகுதித்தும், தோழிகளை ஒருவருக்கொருவர் கட்டி அணைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் சில தேர்வு மையங்களில் மாணவர்கள், மாணவிகள் வண்ண சாயங்களை ஒருவருக்கொருவர் பூசியும், தங்கள் உடையில் நண்பர்களின் கையெழுத்துக்களை பெற்றும் பிரியா விடை கொடுத்தனர்.

Related Stories: