100 சதவீதம் வாக்களிக்க கோரி காய்கறிகள் மூலம் விழிப்புணர்வு

*கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருப்பூர் : காய்கறிகள் மூலம் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் நேற்று புதிய பஸ் நிலையம் உழவர் சந்தையில் துவக்கி வைத்து விவசாயிகள், வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஜனநாயக திருவிழா நிகழ்வான தேர்தலில் பொதுமக்கள் 100 சதவிகிதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் வேளாண் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காய்கறிகளை அடுக்கி 100 சதவீதம் வாக்களிப்போம் ஜனநாயக கடமை ஆற்றுவோம் என வாசகத்தை உருவாக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

இதனை திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாராணவரே துவக்கி வைத்தார். மேலும் உழவர் சந்தையில் இருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியது அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Related Stories: