ஒன்றிய அரசின் மக்களவை விரிவாக்கம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது: எஸ்டிபிஐ தேசிய தலைவர் கடும் கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஸி வெளியிட்ட அறிக்கை: மக்களவையை விரிவாக்கம் செய்யவும், தற்போதைய வடிவில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் ஒன்றிய அரசு முன்மொழிவை மேற்கொண்டுள்ளது. இது பெண்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நீதியையும், உள்ளடக்கிய பிரதிநிதித்துவத்தையும் வழங்குவதற்கான உண்மையான முயற்சி அல்ல.

அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த முயற்சியைக் கைவிட்டு, பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கொள்கைகளின் அடிப்படையில் உள்ளடக்கிய தரவுகளைக் கொண்டு தொகுதி மறுவரையறை ஒன்றிய அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: