அதிமுக-பாஜ கூட்டணியில், அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் சைதாப்பேட்டை, பூந்தமல்லி (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளும், மற்ற மாவட்டங்களில் பெரியகுளம் (தனி), மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஓட்டப்பிடாரம் (தனி), திருச்சிராப்பள்ளி (மேற்கு), மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளும் என மொத்தம் 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. 11 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெரியகுளம் தொகுதியில் டாக்டர் கே.கதிர்காமு, மன்னார்குடி தொகுதியில் காமராஜ், திருவையாறு தொகுதியில் வி.கார்த்திகேயன், காரைக்குடி தொகுதியில் தேர்போகி பாண்டி, திருப்பத்தூர் தொகுதியில் ஞானசேகரன், நாங்குநேரி தொகுதியில் இசக்கி முத்து, ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜன்,
திருச்சிராப்பள்ளி (மேற்கு) தொகுதியில் தொட்டியம் ராஜசேகர், சைதாப்பேட்டை தொகுதியில் செந்தமிழன், பூந்தமல்லி தொகுதியில் தண்ணீர் பந்தல் டி.ஏ.ஏழுமலை, மடத்துக்குளம் தொகுதியில் சி.சண்முகவேலு போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இந்த உத்தேசப் பட்டியலில் சில வேட்பாளர்கள் மாற வாய்ப்புள்ளது. இந்த உத்தேச பட்டியலில் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை. இறுதிப் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
