தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நீடித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக 102 டிகிரி வரை வெயில் அதிகரித்து காணப்பட்டது. கரூரில் நேற்று 101 டிகிரியாக இருந்தது. அதன் ெதாடர்ச்சியாக இன்றும் நாளையும் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து வெப்பநிலை இருக்கும்.

Related Stories: