லால்குடி, மார்ச் 14: புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கட்டிடத்தை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் ரூ.13.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு புதிய நியாயவிலை கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நியாய விலை பொருட்களை வழங்கினார்
