ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனையில் ரூ.1.43 லட்சம் பறிமுதல்

ஒரத்தநாடு, மார்ச் 25: ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூபாய் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பகுதிகளின் தேர்தல் நிலையான தணிக்கை குழு மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது, நாகப்பட்டினம் மாவட்டம் தரணி என்ற பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் உரிய ஆவணம் இன்றி தனது வாகனத்தில் எடுத்து 85 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை நிலையான தணிக்கை குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், கருங்குளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையான கண்காணிப்பு குழு உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள், குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரகலாதன் என்பவர் உரிய ஆவணம் என்று எடுத்துச் சென்ற ரூபாய் 57 ஆயிரத்து 800ஐ பறிமுதல் செய்து ஒரத்தநாடு துணை தாசில்தார் ராதிகா மற்றும் பிரேமாவதிடம் ஒப்படைத்தனர்.

 

Related Stories: