கோடை உழவு பணி தீவிரம்

தேவாரம், மார்ச் 25: தேனி மாவட்டத்தில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலையடிவாரத்தில் உள்ள நிலங்களில் மானாவாரியாக கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச்சோளம், உள்ளிட்ட சிறுதானியங்கள், அதிக ஏக்கரில் பயிரிடப்படுவது வழக்கம். தற்போது சிறுதானியங்கள் என்பதை மலையடிவாரத்தில் அதிகம் காணமுடியவில்லை.

காரணம் பருவம் தவறிய மழையால் அங்குள்ள விவசாய நிலங்கள் பெருமளவில் சிறுதானிய விவசாயத்தை தவிர்த்து, மாற்று விவசாயமாக, அவரை, பீன்ஸ், உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது 100 ஏக்கர் வரை விவசாய உழவு பணிகள் நடக்கிறது. விவசாயிகள் சிறுதானியம் விதைக்க விவசாய நிலங்களை தற்போது அதிகம் பண்படுத்தி வருகின்றனர்.

 

Related Stories: