மலேசியாவில் நடந்த பேட்மிட்டன் டெஸ்ட் தொடரில் மேலசிவபுரி கல்லூரி மாணவர் வெற்றி

பொன்னமராவதி, மார்ச் 25: மலேசியாவில் நடைபெற்ற பால் பேட்மிட்டன் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற மாணவருக்கு மேலைச்சிவபுரியில் பாராட்டு விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச் சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி மாணவர் விஷ்ணு மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெற்ற பால் பேட்மிட்டன் டெஸ்ட் தொடரில் நமது இந்திய அணியில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற கல்லூரி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விளையாட்டு வீரரை கௌரவிக்கும் விதத்தில் முதல்வர் பழனியப்பன் மற்றும் கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள். மேலும் பிப்ரவரி 27, முதல் மார்ச் 4 வரை மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெற்ற இந்தியா – மலேசியா சர்வதேச பால் பேட்மிண்டன் டெஸ்ட் தொடர் போட்டியில், கல்லூரி மாணவர் இந்திய வீரர் விஷ்ணு பங்கு பெற்று வெற்றியாளர் பட்டத்தை பெற்று வந்துள்ளார். இந்த தொடரை ஆசிய பால் பேட்மிண்டன் சம்மேளனம் ஏற்பாடு செய்தது.

 

Related Stories: