முத்துப்பேட்டை அருகே கார் சாலையோர டிரான்ஸ்பார்மரில் மோதியது

முத்துப்பேட்டை,மார்ச் 25: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் – பின்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலை பெட்ரோல் பங்கு அருகே கோட்டூர் சென்றுவிட்டு மணல்மேல்குடி நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் சாலையின் குறுக்கே சென்றதால் நிலைதடுமாறிய கார் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கார் மோதிய வேகத்திற்கு டிரான்ஸ்பார்மர் தனியாக பெயர்ந்து கீழே விழுந்தது. அதன் மின் கம்பங்களும் முறித்து விழுந்து உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்தது. இதை அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் காரில் பயணம் செய்தவர்களும் இரு சக்கர வாகனத்தில் சென்றவரும் எந்தவொரு சிறு காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து எடையூர் போலீசாரும் மின்சார வாரிய அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Related Stories: