ஜெயங்கொண்டம் அருகே இறந்த தந்தையை வணங்கி பிளஸ்2 தேர்வெழுத சென்ற மாணவி

ஜெயங்கொண்டம், மார்ச் 25: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தந்தை உயிரிழந்த நிலையில், அவரை காலை தொட்டு வணங்கி பிளஸ்2 பொதுத்தேர்வை எழுத சென்ற மாணவியின் செயல் அனைவரையும் கண்கலங்க செய்தது. ஜெயங்கொண்டம் அருகே அங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன் (50). லாரி ஓட்டுநரான அழகேசனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் திடீரென அழகேசன் உயிரிழந்தார். அவரது மகள் கார்த்திகா பிளஸ்2 படித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இறுதி தேர்வு தாவரவியல் தேர்வுக்கு தயாராகி படித்து வந்தார். இதனிடையே தந்தை இறந்ததால், செய்வதறியாமல் அழுத கார்த்திகா, தனது தந்தை என்னை நன்றாக படிக்க வேண்டும். நான் உயர்க்கல்வி பயில வேண்டும் என விருப்பப்பட்டார்.

எனவே, அவரது ஆசையை நிறைவேற்றுவேன் எனக்கூறி, அழுதுக் கொண்டே தந்தையின் காலை தொட்டு வணங்கி, தேர்வு எழுத சென்றார். தொடந்து, தேர்வு எழுதி வந்த பிறகு தந்தையை பார்த்து கதறி அழுதார். பின்னர், அவரது உடல் மாலையில் தகனம் செய்யப்பட்டது. தந்தை இறந்த துக்கத்திலும், அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக மாணவி தேர்வெழுத சென்றது அப்பகுதியில் காண்போரின் கண்களை கலங்க செய்தது.

 

Related Stories: