ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் கணினி அறிவியல் துறை மன்ற விழா

ஜெயங்கொண்டம், மார்ச் 25: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மன்ற விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ.) முனைவர் ஜெயச்சந்திரன் தலைமையுரையாற்றினார். கணிதத்துறைத் தலைவர் நந்தகுமார், வணிகவியல் துறைத்தலைவர் சக்திமுருகன், ஆங்கிலத்துறை தலைவர் வடிவேலன் தமிழ்த்துறை தலைவர் பவானி மற்றும் உடற்கல்வி இயக்குநர் அன்பரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கும்பகோணம், மாஸ் குழும கல்வி நிறுவனங்களின் கல்வித்துறைத்தலைவரும், இக்கல்லூரியின் முன்னாள் முதல்வருமான முனைவர் ரமேஷ் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு ”செயற்கை நுண்ணறிவில் சமீபத்திய போக்குகள்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். மேலும் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் ராசமூர்த்தி கணினி அறிவியல் துறை வேலைவாய்ப்புகள் பற்றி எடுத்துக் கூறினார்.

நிறைவாக கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியிர் ராஜேந்திரன் நன்றி கூறினார். கணினி அறிவியல் துறை கௌரவ விரிவுரையாளர் ராதிகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் மேகலா, ரோஷிணி மற்றும் ராஜா ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.  இந்நிகழ்ச்சியில் அனைத்துதுறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் கணினிஅறிவியல் துறை மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Related Stories: