கோவில்பட்டி, மார்ச் 25: சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு தலைவர் அருணாதேவி தலைமையில் அலுவலர்கள் நேற்று அதிகாலை கோவில்பட்டி அருகே வெங்கடேஸ்வரபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சுமை ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், ஆவணங்கள் எதுவுமில்லாமல் ரூ.1,00,500 இருந்தது கண்டுடிக்கப்ட்டது. இதையடுத்து ஆட்டோவில் வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை, காளிமுத்து ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்கள் புளியங்குடிக்கு சென்று ஆடுகள் வாங்க கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து உரிய ஆவணங்களின்றி ெகாண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினர், அதனை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அப்பணம் கோவில்பட்டி கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
