×

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா மயிலாப்பூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை, மார்ச் 25: கபாலீஸ்வரர் கோயில் வருடாந்திர பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் பகுதியில் இன்று முதல் வரும் 1ம் தேதி வரை நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வருடாந்திர பங்குனி பெருவிழா நேற்று முன்தினம் முதல் வரும் 1ம் ேததி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களின் போக்குவரத்து வசதியை கருதி, தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

அதன்படி, இன்று காலை 6 மணிக்கு அதிகார நந்தி திருவிழாவும், 29ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டமும், 30ம் ேததி மதியம் 2 மணிக்கு அறுபத்து மூவர் உற்சவமும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாக்களை முன்னிட்டு ஒவ்வொரு உற்சவமும் தொடங்கும் நேரம் முதல் அந்தந்த நிகழ்ச்சிகள் நிறைவடையும் வரை பக்தர்களின் வருகை எண்ணிக்கைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும். மேற்கண்ட நாட்களில் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

குறிப்பாக, தேவடி தெருவில் இருந்து, நடுத்தெரு மற்றும் சித்திரகுளம், நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவிலிருந்து, கிழக்கு மாட தெரு, வடக்கு சித்திர குளத்திலிருந்து, கிழக்கு மாட தெரு, டி.எஸ்.வி. கோயில் தெருவில் இருந்து தெற்கு மாட தெரு, ஆடம்ஸ் தெருவிலிருந்து தெற்கு மாட தெரு, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு, கச்சேரி சாலையில் இருந்து மந்தளம் நாராயணன் தெரு, லஸ் சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, புனித மேரி சாலையிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, டாக்டர் ரங்கா சாலையிலிருந்து வெங்கடேச அக்ரகாரம் சாலை, முண்டகக்கண்ணியம்மன் கோயில் தெருவில் இருந்து கல்விவாரு தெரு வரை அனுமதிக்கப்பட மாட்டாது.

போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட விவரம்:
 ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் சாலை, பக்தவச்சலம் சாலை, ரங்கா சாலை, சி.பி.ராமசாமி சாலை, ஆர்.ஏ.புரம் இரண்டாவது பிரதான சாலை, வெங்கட கிருஷ்ணா சாலை, தேவநாதன் தெரு, சென்ட் மேரிஸ் சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளியை அடையலாம்.
அடையாறில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, வெங்கட கிருஷ்ணா சாலை, சிருங்கேரி மடம் சாலை, வாரன்சாலை, ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
 ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்ேபட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
 மயிலாப்பூர் கோயில் குளம் அருகில் உள்ள மாநகர பேருந்து நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்தும் இடம்:
கிழக்கு மற்றும் வடக்கு புறம் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் சாலை, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 மேற்கு மற்றும் தெற்கு புறம் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோயில் அருகில், வெங்கடேச அக்ரகாரம் திருமயிலை பறக்கும் ரயில்வே நிலையம் மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையிலிருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள், பி.எஸ்.பள்ளி அருகே கபாலீஸ்வரர் கோயில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags : Mylapore ,Kapaleeswarar Temple Panguni Festival ,Chennai ,Panguni Festival ,Kapaleeswarar Temple ,Chennai Metropolitan Traffic Police ,
× RELATED ரிப்பன் மாளிகை வளாகத்தில் செயல்படும்...