×

திருப்போரூர் தொகுதி வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர் ஆய்வு

திருப்போரூர், மார்ச் 25: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 வாக்குப்பதிவு மையங்களையும் பார்வையிட்டு, தடையில்லா மின்சாரம், குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் ஆகியவை முறையாக செய்யப்பட்டுள்ளதா, எனவும் ஆய்வு செய்தார்.

Tags : Thiruporur ,Chengalpattu ,District ,Collector ,Malathi Helen ,Thiruporur Government Boys’ Higher Secondary School ,
× RELATED ஜோதிடம் பார்க்க வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்