×

ஏடிஎம்களில் நிரப்புவதற்கு கொண்டு சென்ற ரூ.1.31 கோடி பறிமுதல்

திருவொற்றியூர், மார்ச் 25: திருவொற்றியூர் டோல்கேட் அருகே நேற்று முன்தினம் மாலை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த வங்கி ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இல்லாததால், சந்தேகமடைந்த பறக்கும் படையினர் பணத்திற்கான ஆவணங்களை கேட்டனர். ஆனால், இல்லாததால் வாகனத்தை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், தி.நகரில் செயல்படும், ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் ஒப்பந்த நிறுவனம், உரியஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்று சென்றது.

Tags : Thiruvottriyur ,Election Flying Squad ,
× RELATED ரிப்பன் மாளிகை வளாகத்தில் செயல்படும்...