×

பணத்துக்கு உரிய ஆவணங்களை காண்பித்ததால் ரூ.22.17 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு

தூத்துக்குடி, மார்ச் 25: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 54 பறக்கும் படை, 54 நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவினர் இதுவரை உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.44 லட்சத்து 65 ஆயிரத்து 455 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 540 மதிப்பிலான பரிசு பொருட்கள், ரூ.10 லட்சத்து 11 ஆயிரத்து 753 மதிப்பிலான மதுபானங்கள், ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500 மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்களை காண்பித்ததால் ரூ.22 லட்சத்து 17 ஆயிரத்து 380 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Tags : Thoothukudi ,
× RELATED ரிப்பன் மாளிகை வளாகத்தில் செயல்படும்...