நாசரேத், மார்ச் 25: நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட தெருக்களில் குரங்குகள் உலா வருவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட வகுத்தான்குப்பம், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் கடந்த 10 நாட்களாக குரங்குகள் உலா வருகின்றன. சில நேரங்களில் குரங்குகள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் வைத்திருக்கும் பொருட்களை சேதப்படுத்தி விட்டு செல்கின்றன. நேற்று(செவ்வாய்க்கிழமை) காலை நாசரேத் – வகுத்தான்குப்பம் ரோட்டில் சுவரில் 2 குரங்குகள் ஹாயாக அமர்ந்திருந்தன. இதைப் பார்த்த இப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாயினர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நாசரேத் பேரூராட்சி தெருக்களில் வலம் வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
