- லெனினிஸ்ட்
- தேர்தல் ஆணையம்
- குல்ச்சல்
- பகத் சிங்
- குல்சல் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்
- விடுதலை
- மாவட்ட செயலாளர்
- சுசீலா
- லெனினிச குல்சல் சபை
- அந்தோணி முத்து
- கார்மல்
குளச்சல், மார்ச் 25: பகத்சிங்கின் 96வது ஆண்டு நினைவு நாள் குளச்சல் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) அலுவலகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சுசீலா தலைமை வகித்தார். லெனினிஸ்ட் குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அந்தோணி முத்து, மாவட்ட குழு உறுப்பினர்கள் கார்மல், மேரி வெண்ணிலா, ரஞ்சன், சுஜாதா, ஜாண் ஜோசப்ராஜ், திலீப், தங்க லட்சுமி, ஜமீலா ஜெனெட், ஸ்டீபன், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அந்தோணி முத்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் வரை கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் விதிமுறையில் கூறியுள்ளது. ஆனால் இதற்கு உரிய ஆவணங்கள் காட்டாவிடில் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. சிறு, குறு வியாபாரிகள் பாமரர்கள் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாதவர்கள். இவர்கள் காலையில் வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரத்தை முடித்து மாலையில் பணத்தை திருப்பி கொடுப்பவர்கள். இவர்களிடம் எப்படி கொண்டு செல்லும் பணத்திற்கு ஆவணம் இருக்கும். இதனால் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடிகளை கண்டித்து, லெனினிஸ்ட் கட்சி போராட முடிவு செய்துள்ளது’ என்றார்.
