×

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

அருமனை, மார்ச் 25: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஜித்து (32). கொத்தனார். கடந்த 2016ம் ஆண்டு நண்பர்களுடன் பளுகல் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த போது, சிபின் என்பவர் மது பாட்டிலை மறைத்து வைத்ததால், மட்டையால் அவரை தாக்கி கொலை செய்துள்ளார். தொடர்ந்து ஜித்துவை கைது செய்த பளுகல் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், பின்னர் அவர் தலைமறைவாகியுள்ளார். இந்தநிலையில் ஜித்து தூத்துக்குடியில் தலைமறைவாக இருப்பதாக பளுகல் போலீசாருக்கு தகவல் கிடத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்று ஜித்துவை கைது செய்தனர்.

Tags : Arumanai ,Jithu ,Thiruvananthapuram, Kerala ,Palugal ,Sipin ,
× RELATED ரிப்பன் மாளிகை வளாகத்தில் செயல்படும்...