×

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் பி.எட் கல்லூரி ஆண்டு விழா

புதுக்கடை, மார்ச் 25: கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் பி.எட் கல்லூரி ஆண்டு விழா தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. பேராசிரியர் லேகா வரவேற்றார். முதல்வர் பிரியா ஆண்டறிக்கை வாசித்தார். தலைவர் குமரேசதாஸ், பொருளாளர் முருகன், துணைத் தலைவர் சந்தோஷ்குமார், இணைச் செயலர் சதீஷ்குமார், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் நாராயணன், சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் சுனில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் சிறப்புரையாற்றி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர் சுகின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Tags : Kootalumoodu Pathreshwari Amman B.Ed College ,Function ,Pudukkadai ,Kootalumoodu Pathreshwari ,Amman B.Ed College ,Principal ,Rajakumar ,Lekha ,Priya ,President ,Kumaresadas ,Treasurer ,Murugan ,Vice President ,Santosh Kumar ,Joint Secretary… ,
× RELATED ரிப்பன் மாளிகை வளாகத்தில் செயல்படும்...