சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி, மார்ச் 24: சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு முப்படையை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பம் உள்ள 65 வயதுக்குட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர முன்னாள் படைவீரர்கள் தங்கள் விருப்ப கடிதத்தை தூத்துக்குடியில் உள்ள முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கலாம். முன்னாள் படைவீரர்கள் தங்களது படைவிலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் அணுகி உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: