கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.64 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

 

கோவை, மார்ச் 23: கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிக்காக ஒரு தொகுதிக்கு 9 குழுக்கள் வீதம் 90 பறக்கும் படை, 90 நிலையான கண்காணிப்பு குழு, 10 வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 190 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 21ம் தேதி காலை 6 மணி முதல் 22ம் தேதி வரை காலை 6 மணி வரையிலான ஒரே நாளில் பறக்கும்படை சோதனைகளில் ரூ. 22 லட்சத்து 650 பணமும், நிலையான கண்காணிப்பு குழு சோதனைகளில் ரூ. 14 லட்சத்து 46 ஆயிரத்து 250 பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல போலீசார் சோதனைகளில் ரூ.25 ஆயிரத்து 293 மதிப்பிலான 52.65 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.26 லட்சத்து 57 ஆயிரத்து 452 மதிப்பிலான 240 கிராம் வெள்ளி, 194.69 கிராம் தங்கம், மற்றும் 153 தட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.64 லட்சத்து 74 ஆயிரத்து 695 என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: