அடகு நிறுவன பெண் குத்திக்கொலை

 

பாலக்காடு, மார்ச் 18: கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஒல்லூர் கிறிஸ்டோபர் நகரை சேர்ந்தவர் சவுமியா (46). இவர், திருச்சூரிலுள்ள தனியார் அடகு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகாமையில் குடியிருப்பவர் ஆட்டோ டிரைவர் தாமஸ் (65). இவருக்கும், சவுமியா வீட்டாருக்கும் அடிக்கடி வேலிதகராறு ஏற்படுவது வழக்கம். இதுதொடர்பாக இருதரப்பினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு சவுமியா, வேலைமுடித்து வீட்டின் முன்பாக வந்துக்கொண்டிருந்ததைப் பார்த்த தாமஸ் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். இதில் சவுமியா இறந்தார். தப்பியோடிய தாமஸ், கிணற்றில் தவறி விழுந்தார். அவரை பொதுமக்கள் தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: