கூட்டுறவு வங்கி முன் குடும்பத்தோடு காத்திருப்பு போராட்டம்

பெரம்பலூர்,பிப்.16: தள்ளுபடி இல்லை என கூட்டுறவு கடன் சங்கங்கள் அறிவித்தால் அந்தந்த கூட்டுறவு கடன் சங்கம் முன் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு கிராம பொதுமக்கள், விவசாயிகள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ராஜாசிதம்பரம், செல்லதுரை, ரமேஷ், ஞானசேகரன் உள்ளிட்டோருடன் சென்றுஅளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குரும்பலூர், எசனை, அன்னமங்கலம், வெண்பாவூர், இரூர், பெரி ய வடக்கரை, அரசலூர், சில்லக்குடி, புஜயங்கராய நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் பயிர் கடன் மற்றும் நகை அடமானத்தின்பேரில் பயிர் கட ன் பெற்றுள்ளனர். கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் கடன்கேட்டு விண்ணப்பித்து கடன் தகுதி சான்று பெற்ற அனைவருக்கும் கட ன் தள்ளுபடி செய்ய வேண்டும், நகைகளை திருப்பி தர வேண்டும், கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்க வேண்டும். ஜனவரி 31ம் தேதி வரை விவசாயிகளின் பயிர் கடன், நகை அடமானத்தின் பேரில் பெற்ற பயிர் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும்.  வங்கிகளில் கடன் இல்லை, தள்ளுபடி இல்லை என கூட் டுறவு கடன் சங்கங்கள் அறிவித்தால் அந்தந்த கூட்டுறவு கடன் சங்கம் முன் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் பயிர் கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளை களைந்து கடந்த ஜன.31ம் தேதி வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு கடன் தொகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: