நெல்லையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

நெல்லை, மார்ச் 20: தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பிப்ரவரி மாதத்திற்கான தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி மார்ச் 26,27,28,29 ஆகிய 4 நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நெல்லை ஸ்ரீபுரம் பீமா ஜூவல்லரி அருகில் ரோகிணி கோல்டு அகடாமியில் நடக்கிறது. இதில் தங்கத்தின் தரம் அறிதல், 24 கேரட் தங்கம் முதல் 9 கேரட் வரை ஹால்மார்க் தரம் அறிதல் குறித்தும், உரைகல் பயன்படுத்தும் முறை, தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை, கல், ஆபரண வகைகள் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் பற்றியும் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணி பற்றியும், அவைகளை பெறும் வழிமுறைகள் நகை வியாபாரங்கள் குறித்தும் அடகு கடைகள் துவங்குவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

18 வயது முதல் ஆண், பெண் இரு பாலரும் பயிற்சியில் சேரலாம். வயது வரம்பு, கல்வித்தகுதி தேவையில்லை. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பயிற்சி கட்டணம் ரூ.8,200 ஆகியவற்றுடன் நேரில் சென்று பயிற்சியில் சேரலாம். தாழ்த்தப்பட்ட பிரிவினர், விதவைகள், ஊனமுற்றோர் மற்றும் திருநங்கைகள் சலுகை கட்டணமாக ரூ.6500 செலுத்தினால் போதும். கூடுதல் விபரங்கள் அறிந்திட www.rohinigoldacademy.com வெப்சைட்டில் தொடர்பு கொள்ளலாம். இந்த சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: