களியக்காவிளை அருகே சட்டக்கல்லூரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

மார்த்தாண்டம், மார்ச் 20: களியக்காவிளை அருகே தளச்சான்விளை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் 18 வயது மகள் படந்தாலுமூட்டில் உள்ள ஒரு தனியார் சட்டக்கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில், சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன தந்தை உறவினர் வீடுகள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். எங்கு தேடியும் இளம்பெண் கிடைக்காததால், களியக்காவிளை காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மாயமானது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: