நிலக்கரி அனல்மின் திட்டத்தை கைவிட கோரி ஏர் உழவர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு

ஜெயங்கொண்டம், பிப்.12: ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம் துவங்கி 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள மேலூர், கல்லாத்தூர், தேவனூர், கீழகுடியிருப்பு, புதுக்குடி, இலையூர், மருக்காலங்குரிச்சி, தண்டலை உள்ளிட்ட 13 கிராமங்ளில் கடந்த 1996ல் ஆயிரத்து 210 பேரிடம் 8 ஆயிரத்து 370 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் ஆயிரத்து 30 ஏக்கர் நிலம் அரசு நிலமும் கையகபடுத்தப்பட்டது.

27 வருடமாக இத்திட்டத்தை அரசு செயல்படுத்தாததால் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தொடர்ந்து திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளிடம் தங்களது பட்டா நிலத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் இழப்பீட்டுத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜெயங்கொண்டம் நிலக்கரி அனல் மின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இன்று (12ம் தேதி) அனல் மின் திட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு சுபா.இளவரசன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி அழைப்பு விடுத்தார்.

Related Stories: