தூத்துக்குடி, மார்ச் 18: தூத்துக்குடி பள்ளியில் 451 மாணவியருக்கு இலவச சைக்கிளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் சுதன்கீலர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை (பொ)ஜாஸ்மின் வசந்தி வரவேற்றார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு, 11ம் வகுப்பு பயிலும் 451 மாணவியருக்கு இலவச சைக்கிளை வழங்கிப் பேசினார். விழாவில் திமுக பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, திமுக மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உதவி தலைமை ஆசிரியை ஜூலியா நன்றி கூறினார்.
