மார்த்தாண்டம், மார்ச் 18: மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு மேலப்புழிவிளை பகுதியை சேர்ந்தவர் ஹரிசந்திரன். அவரது மனைவி ரெஜினாள்(61). நேற்று கழுவந்திட்டை- மருதங்கோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் அவர் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரெஜினாள் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் ரெஜினாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மகன் சுஜின் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் ரெஜினாள் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பைக்கை ஓட்டி வந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.
