புதுச்சேரி, மார்ச் 18: புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிள்ளையார்குப்பம் பகுதியில் மர்ம நபர் ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், வில்லியனூரை சேர்ந்த பாலா (எ) தினகரன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலா மீது ஆயுதச்சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர்.
