உளுந்தூர்பேட்டை, மார்ச் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (49) என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
