கலெக்டர் ஆபீசில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

தர்மபுரி, மார்ச் 18: தர்மபுரியில், சட்டமன்ற தேர்தல் எதிரொலியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறை நேற்று திறக்கப்பட்டது. தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 12 லட்சத்து 40 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 1596 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் சதீஸ் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சதீஸ் கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 நடைபெறுவதையொட்டி, பொதுமக்கள் தங்கள் பகுதியில் தேர்தல் தொடர்பான ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனே தெரிவிக்கலாம். 1950, 1800 425 7017, 94439 47017 ஆகிய மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Related Stories: