நெல்லை திருமண்டல தேர்தலில் 183 பேர் ஆதரவு டிஎஸ் ஜெயசிங் பேட்டி

நெல்லை, பிப். 12: நெல்லை  சிஎஸ்ஐ திருமண்டல தேர்தலில் 183 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாக ‘லே’  செயலாளர் தேர்தலில் போட்டியிடும் டிஎஸ்.ஜெயசிங் தெரிவித்தார். நெல்லை  சிஎஸ்ஐ திருமண்டல ‘லே’ செயலாளர் பதவிக்கு ஏப்.13ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.  இதற்காக கடந்த 7ம் தேதி திருமண்டல பெருமன்ற மற்றும் சேகர மன்றத்திற்கான முதற்கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் குறித்து லே செயலாளர்  பதவிக்கு போட்டியிடும் டிஎஸ்.ஜெயசிங் நெல்லையில் நிருபர்களிடம்  கூறியதாவது: நெல்லை திருமண்டலத்தில் மொத்தமுள்ள 270 பெருமண்டல உறுப்பினர் தேர்தலில்  183 உறுப்பினர்களும், 130 சேகரங்களில் 80 சேகரங்களிலும் எங்கள் அணியினர்  வெற்றி பெற்றுள்ளனர். இந்த திருச்சபையை  மீட்பதற்காக இந்த தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த திருச்சபையில்  பள்ளி, கல்லூரிகளை மிஷனரிகள் உருவாக்கவில்லையென்றால் நாம் இன்று  வாழ்ந்திருக்க முடியாது.

சிலர் தங்கள் சுயநலத்திற்காக பணம் சம்பாதித்து  வாழ்கின்றனர். இதனை பார்த்து ஏழை மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.  ஆசிரியர்கள் பணிக்கு பலருக்கு சீனியாரிட்டி இருந்தும் பணி கிடைப்பதில்லை.  எனவே இதனை சீரமைத்து நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்காக இந்த தேர்தலில்  போட்்டியிடுகிறோம். பெரும்பான்மை வாக்குகள் எங்களிடத்தில் உள்ளது. அதை  வலியுறுத்தி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறோம். மொத்தம் உள்ள 115  குருவானவர்களில் 90 குருவானவர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. ஓட்டுக்காக  பணம் கொடுத்து தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் வெற்றி பெற்றால்   டக்கரம்மாள்புரத்தில் மருத்துவக்கல்லூரி நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். பணி நியமனங்கள் அனைத்தும் சீனியாரிட்டி அடிப்படையில் மேற்கொள்ளப்படும். தொழில் நிறுவனங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது புஷ்பராஜ், அல்பிரட், ஏடிேஜசி மனோகர், சாலமோன்டேவிட், குருவானவர்கள் கிங்ஸ்லிஜான், ஜெயராஜ் மற்றும் அருள்ஞானராஜ், நொபிலி, பென்னி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: