நிலத்திற்கு ஊட்டச்சத்து வாரி வழங்கும் ஊடுபயிர் வேளாண்துறை ஆலோசனை

 

திருவாடானை, மார்ச் 17: ஊடுபயிர் மற்றும் நவதானியம்பயிரிடுவதால் நிலத்திற்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க வாய்ப்புள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: அங்கக முறையில் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பயிர் சுழற்சி, ஊடுபயிர் மற்றும் நவதானியம் பயிரிடுதல் மூலம் அளிப்பது மிகவும் முக்கியமானதாகும். நிலத்தில் ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மண்வள மேம்பாட்டிற்கு பயிர் சுழற்சி மற்றும் ஊடுபயிர் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. பயிர் சுழற்சி என்பது ஒரு விவசாய நிலத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு விதமான பயிர்களை ஒரே நிலத்தில் தொடர்ந்து பயிரிடுவது ஆகும்.

Related Stories: